மர்மான முறையில் கொல்லப்பட்டு கிடந்த பஞ்சர் கடைக்காரர்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Man murdered Thoothukudi
பஞ்சர்கடை தொழிலாளி கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேலன்புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் நடமாடும் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் துறைமுக சாலையில் ஓலைக்குடிசை அமைத்து தங்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அவர் கொலைசெய்யப்பட்ட கிடந்தார். அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரின் கைகால்களில் காயங்கள் இருந்தது. நள்ளிரவில் அவரை கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.