மனைவி, மகன் மீது தீ வைத்து கொலை செய்த நபர் - நெல்லையில் பயங்கரம்.!!
man fire him body after fire to wife and son in nellai
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள காரைக்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் சகாரியா-மெர்சி தம்பதியினர். இவர்களுக்கு ஹென்றி, ஹார்லி பினோ என்ற 2 மகன்களும், ஹெலன் என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்தக் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் விரக்தியடைந்த மெர்சி தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி மூத்த மகன் ஹென்றிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் சகாரியாவிற்கு உடன்பாடு இல்லாததால் அவரை யாரும் திருமணத்திற்கு சகாரியாவை அழைக்கவில்லை. இதனால் சகாரியா அவர் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் ஹார்லி பினோ தனது தந்தை சகாரியா வசித்து வரும் வீட்டில் மீதமிருக்கும் தனது துணி உள்ளிட்ட உடைமைகளை எடுத்து வருவதற்காக நேற்று மதியம் புறப்பட்டார். ஏற்கனவே பிரச்சினை இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து மெர்சியும் தனது மகனை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அதன் படி இருவரும் சகாரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு இருந்த சகாரியா, தனது மனைவி, மகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையும் மீறி 2 பேரும் தங்களின் உடைமைகளை எடுக்க முயன்றதனால் ஆத்திரமடைந்த சகாரியா, தனது மனைவி, மகனை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை பூட்டி கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் ஊற்றி தீ வைத்துவிட்டார்.
மேலும், சகாரியா தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்துவிட்டு உள்ளே நுழைந்து 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தாய், மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சகாரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
man fire him body after fire to wife and son in nellai