புதுக்கோட்டை || வாங்கிய பணத்தை திருப்பி தராத ஆத்திரம் - நண்பன் செய்த கொடூரச் செயல்.!!
man arrested for kill friend in puthukottai for money issue
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ். இவர் தனது தந்தை நடத்தி வந்த லாரி புக்கிங் அலுவலகத்தை கவனித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். இதேபோல், புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் நண்பர்களான நிலையில் சரவணனிடம், நித்தியராஜ் ரூ.22 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். ஆனால், அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இந்த சூழலில் இருவரும் நேற்று மதியம் ஒரு மதுபாரில் குளிர்சாதன அறையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது, மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தியராஜின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் நித்தியராஜ் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியராஜை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் குற்றவாளி சரவணனை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill friend in puthukottai for money issue