மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்- வைகோ அறிவிப்பு!
Mallai Sathya permanently removed from MDMK Vaiko announcement
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் ஏற்பட்ட கருத்து மோதலின் பின்னர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போலவே, பல போராட்டங்களில் என்னுடன் இருந்த மல்லை சத்யாவும் துரோகம் செய்துவிட்டார்” என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, “துரோகி என்று அழைப்பதற்குப் பதிலாக எனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்து இறந்திருப்பேன்” என கடுமையாக எதிர்வினையாற்றினார்.
இதையடுத்து, நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தச் செயல்கள் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கருதி, முதலில் தற்காலிகமாகவே அவரை நீக்கியிருந்த வைகோ, தற்போது நிரந்தர நீக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்க மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ம.தி.மு.க.வின் உள்கட்சிப் பிரச்சாரம் வெளிப்படையாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mallai Sathya permanently removed from MDMK Vaiko announcement