முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி..!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு பொட்டல் கிராம பகுதிகளில் அடிக்கடி உணவுக்காக வனவிலங்குகள் மலைப்பகுதியில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் காட்டுப்பகுதியில் உள்ள பனை மரத்திலிருந்து பனம் பழங்களை பறிப்பதற்காக சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பனை மரத்தை வேரோடு சாய்த்தது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பனைமரம் உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முண்டந்துறை புலிகள் காப்பாக்கத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் ஆண் யானையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்த சம்பவம் முண்டந்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Male elephant killed by electricshock near Mundanthurai Tiger Reserve


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->