கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கிய வழக்கு.! மீண்டும் மீண்டுமா..? விசாரணை செய்ய நீதிபதி மறுப்பு!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களை கடந்த மே மாதம் 25ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்துவதோடு அவர்களை தாக்கியதாக திமுகவைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள் உட்பட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலை 28ஆம் தேதி விசாரித்த கரூர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்ததோடு 15 பேரையும் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஜூலை 31 ஆம் தேதி 15 பேரும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் ஜாமீன் வழங்க கோரி கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதனை கரூர் மாவட்ட நீதிமன்ற தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மீண்டும் விசாரிக்க முடியாது எனக் கூறி வேறு நீதிபதியின் அமர்வின் முன்பு பட்டியலிடுமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MaduraiHC judge refused to re trial Karur IT officials assault case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->