ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள, தேநீர் விற்பனை செய்து அலைபேசி வாங்க முடிவு... சிறுவனின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ராகுல். ராகுல் அங்குள்ள திருமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தின் வருமானம் பாதிக்கவே, சிறுவனின் தந்தைக்கும் பணி இல்லாமல் போயுள்ளது. 

தற்போது படிப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தந்தைக்கு போதிய வருமானம் இல்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாக இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வழியாக பள்ளிகளுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

தனியார் பள்ளியில் சிறுவன் பயின்று வரும் நிலையில், அலைபேசி வாங்க தந்தையிடம் பணம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து சொந்த முயற்சியில் அலைபேசி வாங்க முடிவு செய்து, தாய் மற்றும் அக்காவின் உதவியுடன் வீட்டிலேயே தண்ணீர் தயார் செய்து, அருகில் உள்ள கடைகள் மற்றும் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று தேநீர் விற்பனை செய்து வருகிறார். 

இந்த வருமானத்தின் மூலமாக விரைவில் அலைபேசி வாங்கி, நானும் எனது அக்காவும் இணையதள வகுப்புகளில் கலந்துகொள்வோம் என்று சிறுவன் ராகுல் தெரிவித்தார். மேலும், தேநீர் விற்பனை செய்து வரும் வருமானத்தால், ஓரளவு குடும்ப செலவுகளையும் ஈடு செய்ய இயலுவதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Tirumangalam child boy Rahul Sales Tea get Mobile Using Online Class


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->