மதுரை தனியார் பள்ளிக்கு சீல்! பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் கைது!
madurai school girl death in water tank
மதுரை கே.கே. நகர் பகுதியில் இயங்கிய தனியார் மழலையர் பள்ளியில், ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பாதுகாப்பின்றி திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்கு அருகில் சென்றபோது தவறி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. அருகிலிருந்த குழந்தைகள் உடனே ஆசிரியர்களை அறிவித்தனர். ஆனால் தொட்டி ஆழமாகவும் தண்ணீர் நிரம்பியிருந்ததாலும், சிறுமியை உடனடியாக மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
தகவல் பெறும் பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப்படை விரைந்து வந்து, 30 நிமிடத்திற்குப் பிறகு சிறுமியை மீட்டனர். ஆனால், தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கியதால் ஆருத்ரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் திவ்யா மற்றும் நான்கு ஆசிரியர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், பள்ளி தற்காலிகமாக முடக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பவ இடத்தையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
English Summary
madurai school girl death in water tank