போதை மறுவாழ்வு மையத்தில் கொடூர கொலை.. முன்னாள் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை மலையாண்டிபுரம் பகுதியில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையனத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையை சார்ந்த மணிவாசகம் (வயது 61) என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரை ஆறு பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. 

இந்த கொலை தொடர்பாக மதுரை ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரை சார்ந்த பாலமுருகன் (வயது 45), பாஸ்கர் (வயது 66), ரவி (வயது 50), ஈரோட்டை சார்ந்த சந்திரசேகர் (வயது 39), கொடைக்கானலை சார்ந்த கோபிநாத் (வயது 30), மேலூரை சார்ந்த பெரோஸ் கான் (வயது 35) ஆகியோர் இக்கொலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போதை மறுவாழ்வு மையத்தில் 2 வருடமாக சிகிச்சை பெற்று வந்த மணிவாசகம், அரியலூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மேற்கூறிய 6 பேரும் காவல்துறையிடம் சிக்கி கடந்த வருடத்தில் மறுவாழ்வுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். 

இவர்கள் போதையில் இருந்து விடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ள குடுமப்த்தினர் தயாராக இல்லை. இதனால் 6 பேரும் போதை மறுவாழ்வு மையத்திலேயே தங்கியிருந்த நிலையில், மணிவாசகத்துடன் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது. 

மேலும், மணிவாசகத்தை பார்க்க அடிக்கடி உறவினர்கள் வந்து சென்ற நிலையில், மணிவாசகத்திற்கு உறவினர்கள் வாங்கி வரும் தின்பண்டம் போன்றவற்றை அவர் யாருக்குமே கொடுக்கமாட்டார். அவருக்கு அமைந்த உறவினர்கள் போல, உங்களுக்கு உறவினர்கள் அமையவில்லை என்று கூறி அவ்வப்போது வெறுப்பேற்றுவார். 

பலமுறை நாங்கள் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து செல்ல முயற்சித்த திட்டங்களை, அதிகாரிகளிடம் முன்கூட்டியே மணிவாசகம் கூறிவிடுவார். இதனால் ஏற்கனவே இருந்த ஆத்திரம், அவர் செய்த செயல்பாடுகள் போன்றவற்றால் சம்பவத்தன்று அவரை அடித்து கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Drug Rehabilitation Center Ariyalur Sendurai School Former HM Manikavasagam Murder by 6 Man Team


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal