#Breaking: முழு ஊரடங்கு மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் ஏற்கனவே 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, முழு ஊரடங்கு மதுரை மாநகராட்சி பகுதிகளில் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், மதுரை மாநகர எல்லைகளுக்கு உட்பட்டுள்ள பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம், மதுரை நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த முழு ஊரடங்கு மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 14 ஆம் தேதி வரை மதுரையில் அமலாகியுள்ள உள்ள ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மதுரை மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,757 ஆக இருக்கிறது. 3,843 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 111 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது நாளொன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 200 க்கும் அதிகமாக ஏற்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai corona virus Lockdown Extend 14 July 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->