உதயநிதி தூக்கி காட்டிய செங்கல்! திறந்து வைக்கப்போகும் மோடி! - Seithipunal
Seithipunal


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரையில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் கட்டுமானங்கள் நடைபெறவில்லை வெறும் செங்கல் கற்கள் மட்டும் தான் உள்ளன என குற்றம் சாட்டி இருந்தார். மேலும் மதுரை முழுவதும் எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த செங்கல்லை கொண்டு தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். 

இந்நிலையில் இன்று மதுரையில் நடைப்பெற்ற பல்துறை வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும் விரைவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் அறிவித்துள்ளார்.

15 மாதங்களுக்கு முன்பு வெறும் செங்கல் மட்டுமே இருந்ததாக சொல்லப்பட்ட மதுரை எய்ம்ஸ் தற்பொழுது 95 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. 

எப்போதும் போல மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள முன் நாள் மற்றும் இந்நாள் ஆளும் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக நெடிசன் கலாய்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai AIIMS Hospital construction work 95 percent complete


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->