வேலை நிறுத்த போராட்டம் அவசியமா? சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குபிடி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கரத்தினர் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை, பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேச்சு வார்த்தை பல கட்டங்களிலும் முற்றுப் பெறாத நிலையில் ஜனவரி 19ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை  தள்ளி வைக்க பட்டதாக வாதிட்டார். அதன் பிறகு தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நிலுவையில் உள்ளதாகவும், புதிதாக அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு தற்போது வரை அமல்படுத்தவில்லை என வாதிடப்பட்டது.


அதற்குத்தான் தலைமை நீதிபதி அமர்வு மிகப்பெரிய பண்டிகையான பொங்கலன்று மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் இருக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  போராட்டம் நடத்துவதற்கு தொழிற்சங்கத்தினருக்கு உரிமை இல்லை எனக் கூறவில்லை. பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது என கூறுகிறோம்" எந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC question Is bus strike necessary


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->