துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Madras High Court restrains Srirangam Rangarajan Narasimhan from making defamatory comments against Dushyant Sridhar
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோவில் சொத்துகளை பாதுகாக்க கோரி, தொடர்ந்து போராடி வருபவர். இவர், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஆன்மிக பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், துஷ்யந்த் ஸ்ரீதர் தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், வழக்கில் அவர் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்துள்ளது.
இதற்கான உத்தரவை நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கை மனுதாரரான துஷ்யந்த் ஸ்ரீதர், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்த நிலையில், அதில், தாம் பெங்களூருவில் வசிப்பதால், வழக்கை சென்னையில் தொடங்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Madras High Court restrains Srirangam Rangarajan Narasimhan from making defamatory comments against Dushyant Sridhar