வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் பெண் அமைச்சர்! இன்றே விசாரணை! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சொத்துகுவிப்பு வழக்கை, மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் விசாரணை செய்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், வழக்கிலிருந்து இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். 

இதேபோல், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் இதே நீதிபதி மாரு ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழக்குகளும் மறு விசாரணைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court I Periyasamy DMK Valarmathi ADMK Corruption Case 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->