தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பிறந்த தினம்! யார் இவர்?
m bhaktavatsalam birthday
எம்.பக்தவத்சலம்:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார்.
விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத்திறனை திறம்பட வெளிப்படுத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.
1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றிவிட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இரத்தசோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி (William P.Murphy) மறைந்தார்.
1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மனிதகுல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய சே குவேரா மறைந்தார்.
1879ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விளிம்பு விளைவை கண்டுபிடித்த மேக்ஸ் வான் லாவ் (Max von Laue) பிறந்தார்.
1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் (Pieter Zeeman) மறைந்தார்.
English Summary
m bhaktavatsalam birthday