தொடர் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்: குழந்தை உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!
ltte members continuous 4th day protested
மேட்டூர், காவிரி-சரபங்கா உபரி நீர்த்திட்டம் மூலம் விவசாய நிலத்தில் குழாய்கள் பதித்து வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, ஜலகண்டாபுரம் போன்ற பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்று இந்த திட்டத்தினை மாற்ற நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் 4வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட 3 பேர் நேற்று மயக்கமடைந்தனர். இதில் குழந்தை தனியார் மருத்துவமனையிலும் மற்ற 2 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாவது, 4வது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று காவிரி-சரபங்கா உபரி நீர் திட்டத்தை மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ltte members continuous 4th day protested