இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. உடற்பயிற்சியாளர் கைது!
Love torture for young woman Fitness trainer arrested
சென்னையில், உடற்பயிற்சி மைய உரிமையாளர் ஒருவர் இளம்பெண்ணுக்கு காதல் தொந்தரவு கொடுத்தது மற்றும் மிரட்டல் விடுத்தது குறித்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ,சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 30) உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த மையத்தில் பயிற்சி பெற 28 வயது தனியார் நிறுவன பெண் ஒருவர் சேர்ந்திருந்தார்.
ஆரம்பத்தில் அந்த பெண்ணிடம் நட்பு ரீதியாக பழகிய ராஜ்குமார், பின்னர் காதலிக்க முன்வந்தார்.இதையடுத்து திருமணம் செய்வதாக கூறியபோதும், அந்த பெண் அவரது காதலை நிராகரித்தார்.
காதல் நிராகரிப்பால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அந்த இளம்பெண்ணை பலமுறை மிரட்டியுள்ளார்.அவர் வேலை செய்த நிறுவனத்திற்கே சென்று, “என்னை காதலிக்காவிட்டால் உன் வேலையை இழக்க செய்வேன்” என மிரட்டினார்.

மேலும், “உன் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது; அவற்றை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்” என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதோடு, ராஜ்குமார் அந்த பெண்ணிடம் ₹1 லட்சம் கடனாக பெற்றும் திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த அத்துமீறல்களை தாங்க முடியாமல், இளம்பெண் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் ராஜ்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Love torture for young woman Fitness trainer arrested