காதல் மயக்கத்தில் மோசமான காரியம் செய்த காதல் ஜோடி.. அதிர்ச்சியில் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த சரவணன் விருதுநகர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவர் அதே கல்லூரியில் படித்து வரும் ரஞ்சிதா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று எண்ணிய பெற்றோர்கள் அவர்களுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, கல்லூரி படிக்கும்போதே காதல் வயப்பட்ட இருவரும் மனக்குழப்பத்தில் என்ன முடிவு செய்வது என்பதை அறியாமல் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்து இருக்கின்றனர்.

அவர்களின் திட்டப்படி விருதுநகர் வழி சாத்தூர் ரயில் பாதையில் வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். படிக்கும் வயதில் அனைவருக்கும், எதிர்கால முடிவுகளை சரிவர எடுக்க தெரிவதில்லை. இதனால் தான் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 

படிக்கும் காலத்தில், தனக்கு எது வேண்டும், நாம் என்ன சூழலில் இருக்கிறோம், சமுதாயத்தின் உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்கு முன்பே காதல் வயப்பட்டு கதையை முடித்து கொள்கின்றனர் பலரும். 

"நிர்வாணம் பெண்களுக்கு மட்டும் தான் அவமானமா..? உனக்கு இல்ல..?! "பெண்ணியம் பேசுகிறதா திரௌபதி..?! தீயாக பரவி சர்ச்சையை கிளப்பும் வீடியோ..! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love suicide in viruthunagar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->