காதல் நாடகமா? குற்றப் பின்னணியா?- 16 வயது மாணவியை ஏமாற்றிய பிரபுவுக்கு கொடுத்த கடும் தண்டனை என்ன...?
Love drama Criminal background What harsh punishment given Prabhu who cheated 16 year old student
திருவண்ணாமலை மாவட்டம் சின்னக்கல்லாபாடியைச் சேர்ந்த பொன்முடியின் மகன் பிரபு (30), 2022ஆம் ஆண்டு 10ம் வகுப்பில் கல்வி பயின்ற 16 வயது சிறுமியிடம் ‘காதல்’ பெயரில் ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக தகவல். பின்னர், சிறுமியை சூழ்ச்சி செய்து கடத்திக் கொண்டு சென்று குழந்தைத் திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வெரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையில் இறங்கி, கடத்தப்பட்ட சிறுமியை மீட்டதுடன், பிரபுவை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, நீதிபதி காஞ்சனா தீர்ப்பை வழங்கினார்.சிறுமியை ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி கடத்தி, குழந்தைத் திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபணமானதால், பிரபுவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.தீர்ப்புக்குப் பின், போலீசார் பிரபுவை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றி அனுப்பினர்.
English Summary
Love drama Criminal background What harsh punishment given Prabhu who cheated 16 year old student