தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.? தேர்தலுக்குப் பிறகு வெளியாகப்போகும் அறிவிப்பு.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். 

ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ.? என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வருகிற 22-ஆம் தேதி இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மேலும், மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனிடையே, சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அறிவிக்கப்படுமோ.? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கொரோனா தொற்று அதிகரித்தாலும், குறிப்பிட்ட அளவிலேயே அதிகரிக்கும் என்பதால் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lockdown again after election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->