அரசு பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி - மாணவர்களின் நிலை என்ன?
Lizard found govt school breakfast food in cuddalore
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது.

இந்த உணவில் ஒரு பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தி உள்ளார். ஆனால், உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படாததால், பள்ளி நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள புவனகிரி மருத்துவமனையில் இருந்து செவிலியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 18 மாணவர்களும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Lizard found govt school breakfast food in cuddalore