புதுக்கோட்டை : மின்னல் தாக்கி பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் மரணம்.! - Seithipunal
Seithipunal


அறந்தாங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் சில நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் பள்ளி மாணவர்கள் 2 பேரை அவரது உறவினர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

 அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lightning strike in pudhukottai 3 peoples death including students


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->