முதியவருக்கு ஆயுள் தண்டனை..பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தீர்ப்பு!
Life sentence for the elderly man Verdict in the case of sexual harassment of a school student
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் ஒருவருக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஓடைமறிச்சான், செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, முத்துகுட்டியை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவற்ற நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நேற்று (7.7.2025) முத்துகுட்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. சத்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2005ம் ஆண்டில் மட்டும், இதுவரை 12 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 12 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Life sentence for the elderly man Verdict in the case of sexual harassment of a school student