சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துணை நடிகர் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள்..! - Seithipunal
Seithipunal


சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன் . இவர் சினிமா. தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த சிறுமிக்கு  மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை கண்ட தென்கரையைச் சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுநர் மணிகண்டன்  என்பவரும் அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில்,  இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Life imprisonment for two


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->