லோகோ வடிவமைப்பாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ரூ.10,000 பரிசுத்தொகை.. நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக சாரல் திருவிழா நடைபெறும்.

இந்த விழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்தது. 

இந்த நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் சாரல் திருவிழாவிற்கான சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது. 

குற்றாலம் சாரல் திருவிழாவிற்கான சின்னம் வடிவமைப்பதில் ஆர்வமுள்ளவர்கள் சின்னத்தை வடிவமைத்து என்ற edm.tenkasi@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 24ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 மேலும் தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு 10,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kutralam logo design competition


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->