#கடலூர் || திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை காவல்துறை அதிகாரி.! - Seithipunal
Seithipunal


குறிஞ்சிப்பாடி அருகே கோவில் திருவிழாவில் அமைக்கப்பட்ட கச்சேரி மேடையில், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை காவல்துறை அதிகாரி ஒருவர் வழங்கிய காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டையில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு இரவு இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அமைக்கப்பட்டிருந்த இசை மேடையில் ஏறிய காவல்துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா, பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிகை அலங்காரங்களை ஒழுங்காக செய்து கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்கள் சாதி கையிர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி-கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பது குறித்த நல்ல கருத்துக்களையும் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் குற்ற வழக்குகளில் ஈடுபடக்கூடாது. அடிதடி சம்பவங்கள் கலந்து கொள்ளக் கூடாது. அதனால் ஏற்படும் பாதிப்புகள், வழக்கு நீதிமன்ற அலைச்சல் குறித்து காவல்துறை அதிகாரி விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதுகுறித்த காணொளி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kurinjipadi temple festival


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->