தமிழகத்தை அதிரவைத்த கோர விபத்து! பிரதமர் மோடி போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


நீலகிரி : நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்து ஒன்றில் உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 

குன்னூர் மரப்பாலம் அருகே இந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பெற்றூவந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

விபத்தில் பலியானவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித் தொகையாக ரூ. இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNR நிதியலிருந்து 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kunnur bus accident sep2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->