விடாமல் வற்புறுத்திய இளைஞர்.. மறுத்த மாணவி.. வழிமறித்து அராஜகம்.! பெண் விபரீத முடிவு.!
Kudiyatham women trying to suicide for Love torched
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதிக்கு அருகில் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிக்கு அருகே உள்ள தரணம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அந்த மாணவியை காதலிக்க சொல்லி சந்துரு என்ற இளைஞர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவிக்கு அந்த நபரின் மேல் ஈடுபாடு இல்லாத காரணத்தால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அவர் மறுத்துவிட்டார். ஆனால் சந்துரு அந்த மாணவியை விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்துள்ளார். சம்பவ தினத்திலும் சந்துரு அந்தப் பெண்ணை நேரில் பார்த்து வழி மறித்து காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறுத்த அந்த மாணவியை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
சந்துருவின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் வீடு சுத்தம் செய்யும் லைசாலை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்துள்ளனர்.
English Summary
Kudiyatham women trying to suicide for Love torched