அரசுப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய சோகம்.. நிலத்தை அவுங்க வாங்கிட்டாங்களாம்.. ஓசூரில் அட்டகாசம்.!! - Seithipunal
Seithipunal


அரசுப்பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கிய கொடூரம் நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீதாராம் நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமாக அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

இடப்பற்றாக்குறை மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு அரசுப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளியின் பொருட்கள் பாதுகாத்து வைக்கும் அறை செயல்பட்டு வந்தது. மேலும், அவ்வப்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அங்கு வந்த இரண்டு பேர் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக பள்ளிக்கட்டிடத்தை இடித்து தரைமட்டமாகியுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேட்கையில், அரசுப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தை நாங்கள் வாங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றனர். இதன்பின்னர், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur Govt School Building Demolished by Anti Socialists


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal