பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபர்! கையும் களவுமாக பிடித்த போலீசார்!  - Seithipunal
Seithipunal


சென்னை, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ராஜேஷ் குடும்பத்துடன் திருவண்ணாமலை வந்தவாசியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தார். 

அவர்கள் இரண்டாவது பிளாட்பாரத்தில் திருவண்ணாமலை பேருந்துக்காக காத்திருந்தனர். மோகனா சிறிது நேரம் கழித்து அவரது பக்கத்தில் வைத்திருந்த 17 சவரன் நகை கொண்ட கைப்பையை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனா அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். பின்னர் யாரோ மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

உடனடியாக இது குறித்து ராஜேஷ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் நகை திருட்டில் ஈடுபட்டது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி டின்சின் நம்கட் (வயது 26) என்பது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் அங்கிருந்த குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyembedu bus stand youth arrest


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->