கொடைக்கானல்|| சாலை சீரமைப்பு: மீண்டும் குவிந்த சுற்றுலா பயணிகள்..மகிழ்ச்சியில் சுற்றுலா வழிகாட்டிகள்! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொடைக்கானலில் செப்டம்பர் மாதத்தில் கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

அடுக்கம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், சவரிக்காடு என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி சீரமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். கொடைக்கானலில்  மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், வாடகை டாக்சி டிரைவர்கள், வழிகாட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodaikanal tourist arrivals increased


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->