கொடைக்கானலில் 59வது கோடை விழா வருகின்ற 24ஆம் தேதி துவக்கம்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் 59வது கோடை விழா வருகிற 24-ஆம் தேதி துவங்க உள்ளது.

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக நடைபெறாமல் இருந்த கோடை விழா, தொற்று குறைந்ததால் வருகின்ற மே 24ஆம் தேதி 59வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

இந்த கோடை விழா பத்து நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாத்துறை சார்பில் மே 24ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடைவிழா நடைபெறும்.

இந்த விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், படகு அலங்கார போட்டி, மீன்பிடி போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும், கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடை விழாவிற்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodaikanal summer festival start April twenty four


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->