கொடைக்கானலில் மீண்டும் எழும் சாகச சுற்றுலா தளம் | நீதிமன்ற உத்தரவை மீறியதால் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல், மன்னவனூர் கவுஞ்சி பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக  புல்வெளிகளாக உள்ளது. 

சுற்றுலாத்துறை மூலம் கவுஞ்சியில் ரூ. 1.75 கோடி மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. 

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதே இடத்தில் நான்காண்டுகளுக்கு முன்பு மீன்விதை பண்ணை அமைக்க திட்டமிட்டனர். 

இதனை அடுத்து மதுரை உச்சநீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடர்ந்ததால், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தியாவில் மீண்டும் சுற்றுலா துறை சார்பில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 

இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையினர் கவுஞ்சி பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் பாதுகாப்புடன் சாகச சுற்றுலா தளம் அமைப்பதற்கு பணிகளை தொடங்கியுள்ளனர். 

இது தொடர்பாக நாங்கள் தட்டி கேட்டபோது எங்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர் என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal court order defiance tourism construction work


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->