மாணவரை கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கொலையாளிகள்!
Killers kill student sleep with corpse
மாணவரை கொன்றுவிட்டு போதையில் பிணத்துடன் கொலையாளிகள் தூங்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11-ந் தேதி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. அதை கைப்பற்றிய போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சூர்யா என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவர் தனது நண்பர் கார்த்திக்கின் காதலியுடன் பேசி, காதலை முறித்து உள்ளார். அத்துடன் அந்த பெண்ணும், சூர்யாவும் காதலித்து உள்ளனர்.
இதை அறிந்த கார்த்திக், தனது நண்பர்களான மாதேஷ், முகமது ரபி, நரேன் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்து உடலை சம்பவ இடத்தில் வீசிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட சூர்யா, கார்த்திக் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். கார்த்திக் காதலித்து வந்த பெண்ணின் செல்போன் எண்ணை அறிந்து அவரிடம் நன்றாக பேசி, காதலை பிரித்துவிட்டார். பின்னர் சூர்யாவும் அந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதை அறிந்த கார்த்திக் தனது நண்பர்களுடன் 4 பேரும் சேர்ந்து சூர்யாவுக்கு அளவுக்கு அதிகமாக போதை ஊசியையும் போட்டனர். அதில் மயங்கிய அவரை கை, கால்களை கட்டி தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர்.
இதற்கிடையில் 4 பேரும் குடிபோதையில் இருந்ததால் சூர்யாவின் பிணத்துடன் அங்கேயே படுத்து உறங்கினர். அதிகாலையில் எழுந்ததும், ஒரு காரில் பிணத்தை ஏற்றி சம்பவ இடத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர்"என்று போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Killers kill student sleep with corpse