கேரளத்தின் இறைச்சிக்கழிவு குப்பைத்தொட்டியாக தமிழக எல்லைப்பகுதிகள்?..! - Seithipunal
Seithipunal


கோழி கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகள் போன்றவை தமிழக எல்லைப் பகுதியில் கொட்டப்படும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

கேரள மாநிலத்தில் இருந்து கோழி கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகள் போன்றவை தமிழக எல்லைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் அப்படியே வீசிவிட்டுச் செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சூழ்நிலை பாதிக்கப்படும் நிலையில், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் சுமார் 3 டன் அளவிலான கோழி மற்றும் மாட்டு இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டு, தமிழக பகுதியில் உள்ள செட்டிகுளம் விலக்கு பகுதியில் கழிவுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கிய நிலையில், மேலும் வாகனம் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த லெவிஞ்சிபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர், விசாரணை நடத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும், சுகாதார துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

கடந்த இரண்டு வருடங்களாக இதுபோன்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கூடங்குளம் காவல்துறையினர் 2 வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில், சுகாதாரத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பின்னர், நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கழிவுகளை கொட்டுவதற்கு தமிழகத்தில் சட்டம் சரியாக இல்லை என்றும், அபராத தொகை விதித்து அவர்களை விடுவிப்பது தொடர்வதால் பயமின்றி தமிழகப் பகுதியில் கழிவுகளை கொட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Waste Products Dumped in Tamilnadu Under Control State Border


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->