கேரள தங்ககடத்தல் ராணியுடன் தொடர்பு! தமிழகத்தில் சிக்கிய சம்பவம்! பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


கேரளாவின் மணப்பாறையில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கடத்தல் பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது சுங்க இலாகா அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா திருச்சூர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கடத்தப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் கொள்கின்றனர். தற்போது வரை இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் கேரள மாநில அமைச்சர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

இந்த நிலையில், கேரளாவில் தங்க கடத்தலில் கைதாகி உள்ள சோபனா உடன் தொடர்பு உள்ளதா என, திருச்சியில் பிரபல இரண்டு நகை நகை கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி என் எஸ் பி சாலையில் உள்ள இரண்டு பிரபல நகைக் கடைகளில், 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு, 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சோதனையில் கேரளக் கடத்தல் தங்க கடத்தல் வழக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகைக்கடைக்கு வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு, மேலும் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விவரம், தற்போது கடையில் உள்ள தங்க இருப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala gold smuggling issue IN tn


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal