இதுவே முதல் முறை; பருத்தி துணியில் நெய்யப்பட்ட திருக்குறள் புத்தகம்; கரூர் நெசவாளர் அசத்தல்..!
Karur weaver impresses by weaving a Thirukkural book on cotton fabric
கரூர் மாவட்டம் இளவனூரைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளரான பிரபு, பருத்தித் துணியால் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்தகத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
பருத்தித் துணியால் நெய்யப்பட்ட திருக்குறள் புத்தகம் இது என்றும், இந்த புத்தகத்தை உருவாக்க எனக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன என்றும், பருத்தித் துணியில் திருவள்ளுவரின் உருவத்தை நெய்திருந்தேன். அதனால், துணியிலேயே ஒரு திருக்குறள் புத்தகத்தை உருவாக்கலாம் என முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கான துணியை சந்தையில் வாங்குவதற்குப் பதிலாக, எங்கள் விசைத்தறியிலேயே அதை நெய்ய நான் முடிவு செய்தேன் என்றும், இதற்காக தூய பருத்தி நூலை நான் பயன்படுத்தியதாகவும், பின்னர் அந்த துணி வெட்டப்பட்டு, அதில் தமிழ் குறட்பாக்கள் மேனுவல் ஸ்கிரீன் பிரின்டிங் முறையில் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளின் அதிகாரங்களில் உள்ள 10 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தோல் அட்டையைக் கொண்டு புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறு மூன்று புத்தகங்களை உருவாக்கி உள்ளதாகவும், மேலும், 07 புத்தகங்கள் பைண்டிங் செய்ய தயாராக உள்ளதகாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புத்தகத்தை உருவாக்க சுமார் ரூ.25,000 செலவாகியுள்ளதாகவும், இதுபோன்று பருத்தித் துணியில் திருக்குறள் புத்தகம் தயாரித்திருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளார். எங்கள் முயற்சிக்கு வரவேற்பு அதிகரித்து அதிக ஆர்டர்கள் கிடைக்கும்போது செலவை குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதுமையான முறையில் திருக்குறள் புத்தகத்தை தயாரிப்பதற்கான யோசனை எவ்வாறு எழுந்தது என்று அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவே, கூறியதாவது;
''என் தாத்தாவும், அப்பாவும் நெசவாளர்களாக இருந்தார்கள். இதனால், சிறுவயது முதலே நான் நெசவுத் தொழில் செய்து வருகிறேன். புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், பல்வேறு யோசனைகளைச் செயல்படுத்திப் பார்க்கவும் நான் விரும்புவேன். அப்படித்தான் இந்த யோசனை வந்தது. முதல்வர் விஜய்யைச் சந்தித்து அவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்க விரும்புகிறேன்.'' என தெரிவித்தாதுள்ளார்.
English Summary
Karur weaver impresses by weaving a Thirukkural book on cotton fabric