ஐடி அதிகாரிகளை தாக்கிய திமுக குண்டர்கள்! பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்! - Seithipunal
Seithipunal


கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள், அதிகாரி ஒருவரை குண்டுக்கட்டாக தொக்கி சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மேலும், திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறி, திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. வருமான வரி சோதனை நடத்த விடாமல் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர்.

மேலும், பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur dmk ITraid Senthilbalaji


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->