வீரவநல்லூரில் சினிமா பாணியில் கொள்ளை...! ஒரு கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் அவுட்...! - வணிகர்கள் அதிர்ச்சி
Cinema style robbery Veeravanallur One kilo silver 1 lakh cash taken out Businessmen shocked
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய், தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை நடைபெறும் இந்த பிரசார கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்காக சென்னை நகரிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து மேலூர், திருப்பத்தூர் வழியாக தனது பிரசார வாகனத்தில் காரைக்குடி நோக்கி பயணமானார்.
அவரின் வருகையை முன்னிட்டு, தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் பைக்குகளில் பின்தொடர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். வழித்தடம் முழுவதும் பொதுமக்கள் திரண்டு விஜய்க்கு கோலாகல வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், காரைக்குடி செல்லும் பாதையில் திருப்பத்தூர் அருகிலுள்ள எஸ்.எஸ்.கோட்டை பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் விஜய்யின் வாகனத்தை தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைக்கு விஜய் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். பின்னர் நடைபெற்ற ஆய்வில் பணம் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், அதிகாரிகள் அவரது வாகனத்தை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.அதனைத் தொடர்ந்து விஜய் தனது பிரசார பயணத்தை மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Cinema style robbery Veeravanallur One kilo silver 1 lakh cash taken out Businessmen shocked