பிரசார பேரணியில் பரபரப்பு: விஜயை பின்தொடர்ந்த பைக் விபத்தில் 2 பேர் படுகாயம்...!
Tension at campaign rally 2 people seriously injured bike accident following Vijay
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே வெற்றியை தெரிவிக்க உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பீரங்கிகள் மாநிலம் முழுவதும் முழங்கி வருகின்றன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காக மதுரையில் இருந்து தனது பிரத்யேகப் பிரச்சார வாகனத்தில் சாலை வழியாக அவர் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டார்.
மேலும், வழியெங்கும் தனது தலைவனைக் காணத் தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.அதுமட்டுமின்றி,விஜய்யின் வாகனத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் உற்சாகமாகப் பின்தொடர்ந்து சென்றனர்.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. உற்சாக மிகுதியில் சென்ற இரு இளைஞர்களின் பைக், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் பிரச்சாரக் களத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tension at campaign rally 2 people seriously injured bike accident following Vijay