'என் கணவரை எங்கும் கொண்டு போகாதீர்கள்'...! - 10 நாட்கள் உடலுடன் இருந்த மனைவியின் பாசக் குரல்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகிலுள்ள கொட்டிகேஹாரா பகுதியில் வசித்து வந்தவர் 77 வயதான சிரில் மோனிஸ். தனது மனைவியுடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களின் மகன் பெங்களூருவிலும், மகள் துபாயிலும் பணியில் உள்ளனர்.

மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மனைவியை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தவர் சிரில் மோனிஸ்.வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிரில் மோனிஸ், சுமார் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

ஆனால் தனது கணவர் இறந்துவிட்டார் என்பதே மனைவிக்கு தெரியாமல், அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து வந்தார். மகன் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், “அப்பா நலமாக இருக்கிறார்” எனவே கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலப்போக்கில் உடல் சிதைவடைந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சிரில் மோனிஸ் உடல் அழுகிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்த காாவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் உடலை மீட்க முயன்றபோது, மனைவி தனது கணவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என நம்பி, உடலை எடுக்க அனுமதிக்காமல் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டார். “என் கணவரை எங்கும் கொண்டு போகாதீர்கள்” என்று கண்ணீர் மல்கக் கெஞ்சிய அந்த தருணம் அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கியது.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்த மகன் விரைந்து வந்து தாயை சமாதானப்படுத்தியதன் பின்னர், காாவலர்கள் சிரில் மோனிஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்குகள் மூலம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் மனித பாசத்தின் ஆழத்தையும், மனநிலை பாதிப்பு எவ்வாறு உண்மையையே மறைக்கிறது என்பதையும் உருக்கமாக வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont take my husband anywhere affectionate voice wife who body 10 days


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->