கருணாநிதி நினைவிடத்தில் புத்தாண்டு அலங்காரம்.!
karunanithi memorial place decration for new year
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன படி, 2022-ம் ஆண்டு நிறைவடைந்து இன்று 2023-ம் ஆண்டு பிறந்துள்ளது.

இந்த புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து கேக் வெட்டி மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வருடம் பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் புத்தாண்டுக்கான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில், "தலைநிமிர்ந்த தமிழகம்.. மனங்குளிருது தினந்தினம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
English Summary
karunanithi memorial place decration for new year