கார்கில் வெற்றி தினம்..நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை!
Kargil Victory Day Chief Minister Rangasamy pays tribute at the memorial
புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் இன்று கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் கொண்டாடப்பட்டது.
1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.இந்த வெற்றி தினத்தை இந்திய ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் இந்த போரில் இந்திய வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதனை நினைவு கூறும் வகையில் கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.குடியசுத் தலைவர்,பாதுகாப்புத்துறை அமைச்சர் என தலைவர்கள் பலர் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் இன்று கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் கொண்டாடப்பட்டது.முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு போர்வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அமைச்சர்க்ள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர்,ரமேஷ் லட்சுமிகாந்தன், தலைமைச் செயலர் Dசரத் சவுகான்,காவல் துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்தியசுந்தரம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், இந்தியக் கடலோரக் காவல் படை, தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் போர்வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
English Summary
Kargil Victory Day Chief Minister Rangasamy pays tribute at the memorial