காமுகன் காசி வழக்கில் அடுத்த அதிர்ச்சி.. சைபர் கிரைம் அதிகாரிகள் பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை சார்ந்த காமுகன் காசி, இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டான். இப்போது சிறையில் கம்பிஎண்ணிக்கொண்டு இருக்கும் நிலையில், எப்படியாவது ஜாமீன் மூலமாக வெளியே வந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறான். 

ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவன் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் காசியிடம் விசாரணை மேற்கொண்டதில், காமுகன் காசி கல்லூரி மாணவியை ஆசைவார்த்தை கூறி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரவழைத்து அந்த மாணவியை பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்ததும், இதனை வைத்து பணம்பறிப்பு செய்ததும் அம்பலமாகியுள்ளது. 

இவனது லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தியத்தில், பல பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்துள்ளதையும் கண்டித்துள்ளனர். வழக்கு விசாரணையின் போதே புகார் அளித்த பெண்களின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சைபர் கிரைம் காவல் துறையினர் 800 க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் மற்றும் புகைப்படங்களை மீட்டுள்ளனர். 

இவனிடம் தொடர்ச்சியாக 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி சீரழித்த காமுகன் கொடூரனை காவல் துறையினரும், அரசும் இத்தனை நாட்கள் விசாரணை என்ற பெயரில் பாதுகாத்து வருவதே மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பல், இராமநாதபுரம், சேலம் போன்று பல மாவட்டத்திலும் இதனைப்போன்ற கொடூரம் அரங்கேறியுள்ள நிலையில், இவர்களை ஏதேனும் ஒரு காரணம் சொல்லி என்கவுன்டர் செய்ய வழியில்லையா? என்றும் பொதுமக்கள் கேள்வியை முன்வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Nagarcoil Culprit Kasi Case Update 11 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->