டியூசன் சென்று வந்த சிறுமிகளிடம் சில்மிஷம்.. 4 வாலிபர்களை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


இரணியலில் டியூசனுக்கு சென்ற மாணவிகளிடம், ஆபாசமாக பேசி அத்துமீறிய 4 வாலிபர்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவிகளை குறிவைத்து ஆபாசமாக பேசுதல், நாடகக்காதல் வலை வீசுதல், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுதல் என குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

கடந்த 9 மாதமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு தொல்லை கொடுத்து வரும் சம்பவம் மீண்டும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், இரணியல் பகுதியில் டியூசனுக்கு சென்று வரும் மாணவிகளிடம் வாலிபர்கள் கேலி செய்தல், உடைகள் குறித்து விமர்சித்தல், அலைபேசியில் போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்தல் என அத்துமீறி வந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறவே, ரகசியமாக வாலிபர்களை பெற்றோர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதன்படி, சம்பவத்தன்று மாணவிகளிடம் சாலையில் சில்மிஷம் செய்த காமுக வாலிபர்களை மடக்கிப்பிடித்து அடித்து நொறுக்கிய பெற்றோர்கள், ஆத்திரம் தீர்ந்ததும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வாலிபர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Eraniel Youngsters attacked by girl Students Parents


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal