உடன்பிறந்த சகோதரியை சீரழித்த 16 வயது தம்பி.. ஆபாச படங்கள் பார்த்து கேடாகி, அக்காவை கர்ப்பமாக்கிய கொடூரன்.! - Seithipunal
Seithipunal


தன்னுடன் பிறந்த சகோதரியையே தம்பி கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த கூலித்தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளிக்கு 17 வயது மகளும், 16 வயது மகனும் உள்ளனர். 

16 வயது சிறுவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கூலித்தொழிலாளிக்கு உடலநலக்குறைவு காரணமாக பணிக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, தாயார் தினமும் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார். 

VPN பயன்படுத்தினால், ஆபாசப்படம் பார்ப்பதை கண்டறிய முடியாதா.?! - Seithipunal

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த தாயிடம், தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது என்று கூறி கதறி அழுது இருக்கிறார். இதனால் பதறிப்போன தாய் சிறுமியை அங்குள்ள குளச்சல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, அங்கு சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, இது தொடர்பாக குளச்சல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், ஊரடங்கு காரணமாக இணையவகுப்புகள் நடந்து வரும் நிலையில், மகனின் படிப்புக்காக தாய் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். 

ஆபாச படம் பார்த்த இளைஞர்..8 வருடம் கழித்து சிக்கினார்..! காவல்துறையினரின்  அதிரடி.! - Seithipunal

ஸ்மார்ட் போன் மூலமாக இணையவகுப்புகளில் கலந்துகொண்ட சிறுவன், அவனது நட்பு பழக்கவழக்கம் மூலமாக ஆபாச படங்கள் பார்க்க தொடங்கி இருக்கிறான். எந்த சமயத்திலும் ஆபாசதளத்தில் இருந்து வந்த சிறுவன், தனது அக்காவையே சீரழிக்க எண்ணியிருக்கிறான். 

ஆபாச தளங்களை பார்த்தவாறே பலமுறை தனது அக்காவை சீரழித்த காரணத்தால் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறான். இதனையடுத்து, சிறுவனை கைது செய்த குளச்சல் காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

மாணவிகளுக்கு போதை மருந்து கொடுத்து ஆபாசபடத்தில் நடிக்க வைத்த இணையதளம்..! -  Seithipunal

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இணையங்களில் உலாவும் சிறார்கள் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.. நீங்கள் பார்க்கும் ஆபாச படம் / படிக்கும் ஆபாச கதைகள் அனைத்தும் பணத்திற்காக பாலியல் தொழிலாளர்களை வைத்து சித்தரிக்கப்பட்டவை அல்லது யாரோ ஒருவரின் கற்பனை வளத்தை வைத்து எழுதப்பட்டவை.  

அவர்கள் உடன் பிறந்தார்களோ, பிறவாதவர்களோ, அண்டை வீட்டாரோ, சொந்தக்காரர்களோ கிடையாது என்பதே நிதர்சனம். அற்ப படங்களை பார்த்து 5 நிமிட இன்பத்திற்காக வாழ்க்கையை இழந்து, உங்களின் குடும்ப உறுப்பினர்களிடையே முறையற்ற உறவுகளை ஏற்படுத்திவிடாதீர்கள். அது நாளை உங்களுக்கு எமனாக ஆகலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari Colachel Brother Abused His Own Sister After Watching Porn Website


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->