பரபரப்பு! கொச்சி துறைமுகத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் கப்பல்...! மீட்பு பணியினர் தீவிரம்...!
Container ship capsizes at Kochi port Rescue efforts intensify
கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு கண்டெய்னர் கப்பல் வந்து கொண்டிருந்தது.அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.

இது சுமார் 184 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பல், விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கொச்சி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய கப்பலிலிருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கேரளா மாநிலம், அப்பகுதிக்கு செல்லும் கப்பல் மாலுமிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Container ship capsizes at Kochi port Rescue efforts intensify