உடல் நலக்குறைவால் தலைமை காஜி நேற்று மறைவு...! - த.வெ.க விஜய் இரங்கல்
Chief Qazi passed away yesterday due to ill health TVK Vijay condoles
நேற்று முதுமை காரணமாக 84 வயதான, தமிழக அரசின் தலைமை ''காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப்'' காலமானார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் நேற்று இரவு 9 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK ) தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுத்தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
விஜய்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர்.
அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.
அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இவருடன் இணைந்து அவரது தொண்டர்களும் இரங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Chief Qazi passed away yesterday due to ill health TVK Vijay condoles