மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தர்கா: கார்த்திகைத் தீபம் ஏற்றி மக்கள் வழிபாடு
Kannur Dargah karthigai deepam
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே உள்ள கானூர் கிராமத்தில் அமைந்துள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்காவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தித் தீபம் ஏற்றப்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் வழிபாடு நடத்தினர்.
தர்காவில் தீப வழிபாடு
வக்பு வாரியத்தால் இணைக்கப்பட்ட இந்தத் தர்காவில், ஆண்டுதோறும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
நம்பிக்கை: தர்கா நிர்வாகிகள் கூறுகையில், ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இங்கு வந்து, தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை வைத்து வழிபடுகின்றனர். எனவே, இது மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
உரூஸ் விழா: ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவிலும் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று வழிபடுகின்றனர்.
நீலகிரி ஊட்டி: நஞ்சநாடு கிராம மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில் கல்தூணில் மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் கிராம மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
English Summary
Kannur Dargah karthigai deepam