அனில் அம்பானி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1,120 கோடி சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை..!
Assets worth Rs 1120 crore belonging to Anil Ambanis company frozen
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றில் நடந்த மோசடியை அடுத்து, அனில் அம்பானி நிறுவனத்துக்கு சொந்தமான 1,120 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 07 சொத்துகள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் 02 சொத்துகள், ரிலையன்ஸ் வேல்யூ ச்ரவீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிக்சட் டெபாசிட்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கியுள்ளது. இதன் மூலம் அனில் அம்பானி வழக்கில் இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.10ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

அதாவது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய கடனில் ரூ.13 ஆயிரம் கோடியை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக அனில் அம்பானியின் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். மேலும், அனில் அம்பானி உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Assets worth Rs 1120 crore belonging to Anil Ambanis company frozen